சென்னையிலேயே ஐடி வேலைவாய்ப்பு.. அழைக்கும் எச்சிஎல்.. மிஸ் பண்ணாதீங்க!

Follow Us

சென்னையிலேயே ஐடி வேலைவாய்ப்பு.. அழைக்கும் எச்சிஎல்.. மிஸ் பண்ணாதீங்க!

 

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.

                                                                                 


இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.


முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த விபரம் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு;


எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது சீனியர் ஜாவா சாப்ட்வேர் இன்ஜினியர் (Senior Java Software Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுக்குள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஜாவாவை பயன்படுத்தில் சாப்ட்வேர் டெவலப் மற்றும் டெஸ்ட்டிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் வெப் சர்வீசஸ் மற்றும் RESTful API டெவலப்மென்ட்டில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.


Java/J2ee Jsp, Struts2, Spring 5.x.x, Rest API, JMS, Nety Framework (Asynchronous even -driven nework applicaion framework) உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அப்ளிகேஷன் டெவலப்மென்ட் செய்வதில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். அதேபோல் Oracle 19C, Complex SQL Query writing, DB Trigger and Procedure உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். JUNIT Automation பற்றிய அறிவை கொண்டிருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக தங்களின் Resume-யை Sushmitha.mj@hcl.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விண்ணப்பத்துக்கான காலஅவகாசம் எப்போது வேண்டுமானாலும் முடியலாம்.


இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் பணி என்பது இருக்கும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here





Post a Comment

0 Comments