Bank Holidays | ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..? லிஸ்ட் இதோ..!

 ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட 16 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                                                                             


வங்கி சேவைகளைப் பயன்படுத்தும்போது எந்தப் பிரச்சினையும் ஏற்படாதவாறு வாடிக்கையாளர்கள் இந்த விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அதன்படி, நிதியாண்டின் இறுதியில் வங்கி மூடல் காரணமாக ஏப்ரல் 01 செவ்வாய்க்கிழமை வங்கிகள் மூடப்படும். அன்று வாடிக்கையாளர்கள் வங்கிச் செயல்பாட்டைப் பெற முடியாது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின்படி இது பொது விடுமுறையாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஆன்லைன் வங்கி சேவைகள் வழக்கம் போல் எந்தத் தடையும் இல்லாமல் தொடரும்.

வங்கிகள் விடுமுறை நாட்கள்: 


ஏப்ரல் 1 - பொது விடுமுறை நாள்

ஏப்ரல் 5 - பாபு ஜெகஜீவன் ராமின் பிறந்தநாள்

ஏப்ரல் 6 - ஞாயிற்றுகிழமை

ஏப்ரல் 10 - மஹாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 12 - இரண்டாவது சனிக்கிழமை

ஏர்பல் 13 - ஞாயிற்றுகிழமை

ஏப்ரல் 14 - அம்பேத்கர் பிறந்தநாள் / தமிழ் வருட பிறப்பு

ஏப்ரல் 15 - பெங்காலி புத்தாண்டு / போக் பிஹு

ஏப்ரல் 16 - போக் பிஹு

ஏப்ரல் 18 - புனித வெள்ளி

ஏப்ரல் 20 - ஞாயிற்றுகிழமை

ஏப்ரல் 21 - காரியா பூஜா

ஏப்ரல் 26 - இரண்டாவது சனிக்கிழமை

ஏப்ரல் 27 - ஞாயிற்றுகிழமை

ஏப்ரல் 29 - பகவான் ஸ்ரீ பரசுராமர் ஜெயந்தி

ஏப்ரல் 30 - பசவ ஜெயந்தி / அக்ஷய திரிதியை

 ஏப்.1 முதல் பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் இந்த சலுகை கிடைக்கும்... தமிழக அரசு வெளியிட்ட அரசாணை


சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தை 11 நாட்கள் மூடப்படும். இவற்றுடன், சந்தை மூன்று பொது விடுமுறை நாட்களுக்கு மூடப்படும்:


ஏப்ரல் 10 (வியாழக்கிழமை) - ஸ்ரீ மகாவீர் ஜெயந்தி


ஏப்ரல் 14 (திங்கள்) - டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி


ஏப்ரல் 18 (வெள்ளிக்கிழமை) - புனித வெள்ளி


Post a Comment

0 Comments