சமைக்க தெரிந்த பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி. SBI வங்கியின் அருமையான திட்டம். நீங்களும் சாதிக்கலாம்..!!!

 இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். இப்படி சாதிக்க விரும்பும் பெண்களுக்கு அரசும் உதவி வருகிறது.

                                                                                      


அவர்களுக்கு பல்வேறு தொழில் கல்வி பயிற்சிகளையும், நிதி உதவிகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அன்னபூர்ணா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்குவதற்கும் இந்த திட்டத்தின் மூலமாக கடன் பெறலாம். ஏற்கனவே இது போன்ற தொழில் செய்வதற்கு அதிகபட்சமாக 50,000 நிதி உதவி கடனாக வழங்கப்படுகிறது.


இந்த திட்டத்தில் கடன் தொகை பெறுவதற்கு எந்த விதமான பிணயமும் தேவை கிடையாது. பயனாளர்கள் பெற்ற கடன் தொகை மூன்று வருடங்கள் வரை திருப்பி கொடுப்பதற்கான கால அவகாசமும் கொடுக்கப்படுகிறது. அதேபோல இந்த கடன் தொகையானது உணவு பொருட்கள் ,தொழில் தொடங்க தேவையான பொருட்கள், சிலிண்டர் இணைப்பு போன்ற வசதிகளை செய்து கொள்வதற்கு தான் வழங்கப்படுகிறது. இந்த கடனை பெறுவதற்கு பக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments