Central Bank of India Recruitment 2024

Follow Us

Central Bank of India Recruitment 2024

 இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா தொழிற்பயிற்சிகள் சட்டம், 1961 இன் கீழ் மற்றும் வங்கியின் தொழிற்பயிற்சி கொள்கையின்படி, தொழிற்பயிற்சியாளர்களின் ஈடுபாட்டிற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளது. இங்கு மொத்தம் 3000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் 21-02-2024 முதல் 06-03-2024 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


Central Bank of India காலிப்பணியிடங்கள்:

மத்திய பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 1961 அப்ரண்டிஸ் சட்டம் மற்றும் வங்கியின் பயிற்சிக் கொள்கையின்படி, தொழிற்பயிற்சியாளர்களின் ஈடுபாட்டிற்கான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. அறிவிப்பின் படி மொத்தம் 3000 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வங்கியின் விருப்பப்படி அந்தந்த பிராந்தியங்களில் உள்ள கிளைகள்/அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apprentice கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான தகுதிகள் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 31.03.2020க்குப் பிறகு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் தேர்ச்சிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் கட்-ஆஃப் தேதியின்படி, 01.04.1996 முதல் 31.03.2004 க்குள் பிறந்திருக்க வேண்டும். இருப்பினும், அரசாங்கத்தின்படி SC/ST/OBC/PWBD போன்ற பிரிவுகளுக்கு அதிக வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை:

Online Written Test (objective type)

Local Language Proof

மாத உதவித்தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,000/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

Apprentice  விண்ணப்ப கட்டணம்:

PWBD விண்ணப்பதாரர்கள்  – ரூ.400/-+GST

Schedule Caste / Schedule Tribe / All Women candidates/EWS – ரூ.600/-+GST

மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ. 800/-+GST

விண்ணப்பிக்கும் முறை:

அனைத்து விண்ணப்பதாரர்களும் 21.02.2024 முதல் 06.03.2024 வரை www.nats.education.gov.in (அப்ரெண்டிஸ்ஷிப் போர்டல்) என்ற இணைப்பைக் கிளிக் செய்து இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments