TMB வங்கி Probationary Clerks வேலைவாய்ப்பு 2023 – 72 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட், (TMB) Probationary Clerks பதவிக்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் அனைத்து வழிமுறைகளையும் கவனமாகப் படித்து, பதவிக்கான அனைத்து தகுதித் தகுதிகளையும் அவர்கள் பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய வேண்டும். அதன் பின் ஆர்வமுள்ளவர்கள் 16.10.2023 முதல் 06.11.2023 வரை ஆன்லைனில் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
TMB வங்கி காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் நிறுவனத்தில் Probationary Clerks பதவிக்கு என மொத்தம் 72 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
TMB வங்கி ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு:
Graduate விண்ணப்பதாரர்கள் 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்; 31.08.2023 இன் படி Post-graduates 26 ஆண்டுகள். மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி) / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிசி) இரண்டு ஆண்டுகள் மற்றும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
TMB வங்கி பணிக்கான விண்ணப்ப கட்டணம்:
Probationary Clerk பதவிக்கு ரூ.600/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும்முறை:
https://ibpsonline.ibps.in/tmblposep23/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு வரும் 06.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments