TN MRB Therapeutic Assistant வேலைவாய்ப்பு 2023 – 67 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.56,900/-
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது Therapeutic Assistant (Male / Female) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை செய்தித்தாள்களில் தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 67 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 20.06.2023 முதல் 10.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TN MRB காலிப்பணியிடங்கள்:
- Therapeutic Assistant (Male) – 36 பணியிடங்கள்
- Therapeutic Assistant (Female) – 31 பணியிடங்கள்
- என மொத்தம் 67 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Therapeutic Assistant கல்வி தகுதி:
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம், தமிழ்நாடு அரசு அல்லது செயலாளரால் வழங்கப்பட்ட நர்சிங் தெரபியில் 2 ½ வருட டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/SCA/ST/DAP(PH) விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
- மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
TN MRB சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18000/- முதல் ரூ.56900/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
MRB தேர்வு செயல்முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 10.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments