திருச்சியில் ரூ.30,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

திருச்சியில் ரூ.30,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

திருச்சிராப்பள்ளியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் காலியாக உள்ள Data Entry Operator Trainee, Accountant, Pharmacist மற்றும் Horticultural Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 03.04.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIT திருச்சி காலிப்பணியிடங்கள்:
  • Data Entry Operator Trainee (DEO) – 6 பணியிடங்கள்
  • Accountant – 2 பணியிடங்கள்
  • Pharmacist – 1 பணியிடம்
  • Horticulture Assistant – 1 பணியிடம்

என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பணிக்கான வயது வரம்பு:

03.04.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

1. Data Entry Operator Trainee (DEO) – குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் படி சம்பளம் வழங்கப்படும்

2. Accountant – குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் படி சம்பளம் வழங்கப்படும்

3. Pharmacist – குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் படி சம்பளம் வழங்கப்படும்

4. Horticultural Assistant – ரூ. 30,000/- (Consolidated)

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s Degree/ B.Com/ M.Com/ Diploma/ B.Sc. (Horticulture)/ B.Tech. (Horticulture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:
  • Test
  • Certificate Verification
  • Interview
விண்ணப்பிக்கும் முறை:
NIT திருச்சியின் https://www.nitt.edu/ என்ற இணைய தளம்  மூலம் 21.03.2023 முதல் 03.04.2023 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Post a Comment

0 Comments