SSC CHSL அறிவிப்பு வெளியீடு – 4500 காலிப்பணியிடங்கள் || 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Combined Higher Secondary (10+2) Level Examination,2023 குறித்த புதிய ஆறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தோராயமாக 4,500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
SSC CHSL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator பணிக்கென மொத்தம் 4500 காலிப்பணியிடங்கள் தோராயமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSC கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSC CHSL வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SSC ஊதிய விவரம்:
Lower Divisional Clerk/Junior Secretariat Assistant – ரூ.19,900-63,200
Postal Assistant/Sorting Assistant – ரூ.25,500-81,100
Data Entry Operator – ரூ.25,500-81,100/-
SSC CHSL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Tier-I மற்றும் Tier-II என Computer Based Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments