தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை – ரூ.62,000/- சம்பளம்!

 

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை – ரூ.62,000/- சம்பளம்!

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆனது உதவி அர்ச்சகர் போன்ற பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

TNHRCE காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி உதவி அர்ச்சகர் போன்ற பல்வேறு பணிக்கென மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • நாதஸ்வரம் – 1 பணியிடம்
  • தவில் – 1 பணியிடம்
  • தல்லம் – 1 பணியிடம்
  • சுருதி – 1 பணியிடம்
  • உதவி அர்ச்சகர் – 1 பணியிடம்
  • இலை விபூதி போத்தி – 1 பணியிடம்
உதவி அர்ச்சகர் கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளிகளில் தொடர்பான துறையில் சான்றிதழ் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
TNHRCE வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

உதவி அர்ச்சகர் ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,900/- முதல் ரூ.62,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNHRCE தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி

இணை ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

திருச்செந்தூர் 628215

Download Notification PDF

Post a Comment

0 Comments