TAFCORN தமிழ்நாடு வனத் தோட்டக் கழக லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,15,700/-
TAFCORN தமிழ்நாடு வனத் தோட்டக் கழக லிமிடெட்டில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, Computer Programmer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05-Oct-2022 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
TAFCORN காலிப்பணியிடங்கள்:
Computer Programmer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Computer Programmer கல்வி தகுதி:
TAFCORN அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் கணினி பயன்பாட்டில் முதுகலைப் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் அறிவியல் முதுகலை பட்டம் (தகவல் தொழில்நுட்பம்/ கணினி அறிவியல்) முடித்திருக்க வேண்டும்.
TAFCORN அனுபவம்:
கணிப்பொறி நிரலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 3 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
TAFCORN தேர்வு செயல் முறை:
விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Computer Programmer சம்பளம்:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு Pay Matrix Level 16 ன் படி, ரூ.36,400 – 1,15,700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
Computer Programmer பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் லிமிடெட் (TAFCORN), மல்லாசிபுரம், கம்பரசம்பேட்டை, திருச்சிராப்பள்ளி – 620101 என்ற முகவரிக்கு 05-அக்-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.
0 Comments