SSC SI வேலைவாய்ப்பு 2022 – 4300 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Sub-Inspector (Exe.) in Delhi Police-Male, Sub-Inspector (Exe.) in Delhi Police-Fe Male மற்றும் Sub-Inspector (GD) in CAPFs ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 4000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 10.08.2022 முதல் 30.08.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
SI கல்வித் தகுதி: (30.08.2022 தேதியின்படி)
அனைத்து பதவிகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: (01.01.2022 தேதியின்படி)
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.01.2022 தேதியின்படி 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; அரசாங்கத்தின்படி OBC மற்றும் Ex-S க்கு 3 ஆண்டுகள். விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிப்படி தளர்வு வழங்கப்பட்டு உள்ளது.
சம்பள விவரம்:
- Sub-Inspector (GD) in CAPFs: ரூ.35,400-ரூ.1,12,400/-
- Sub-Inspector (Executive) – (Male/Female) in Delhi Police : ரூ.35,400-Rs.1,12,400/-
தேர்வு செயல்முறை 2022:
CBT Paper-I, Physical Standard Test (PST)/Physical Endurance Test (PET) மற்றும் Paper-II and Detailed Medical Examination (DME) ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் & புதுச்சேரி
விண்ணப்பிக்கும் முறை:
மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பத்தார்கள் SSC இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://ssc.nic.in/ என்ற இணைப்பின் மூலம் 10.08.2022 முதல் 30.08 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
0 Comments