தமிழ்நாடு அரசு மீனவ நலத்துறையில் வேலைவாய்ப்பு 2022 – 433 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக கடலோர கிராமங்களில் (433) சாகர் மித்ரா என்கின்ற முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடத்திற்கு ஒரு வருடத்திற்கு பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு மீனவ நலத்துறை காலிப்பணியிடங்கள்:
ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் சாகர் மித்ரா பதவிக்கு 433 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.07.2022 தேதியின்படி, 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
சாகர் மித்ரா கல்வி தகுதி:
மீன்வள அறிவியல் / கடல் உயிரியல் / விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய தகுதி இல்லை என்றால், மற்ற பட்டதாரிகள் அதாவது, வேதியியல்/ தாவரவியல்/ உயிரி வேதியியல்/ நுண்ணுயிரியல்/ இயற்பியல் ஆகியோர் பரிசீலிக்க படுவார்கள். கூடுதலாக, தகவல் தொழில்நுட்பம் (IT) படித்தவர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
Sagar Mitra சம்பளம்:
சாகர் மித்ராவுக்கு செயல்திறன் ஊக்கத்தொகையாக மாதம் ரூ.15,000/- வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments