விமான துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

விமான துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Air India நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Female Cabin Crew பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு பெண்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் 23.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எனவே Air India நிறுவனத்தில் வேலை தேடி கொண்டு இருக்கும் நபர்கள் அனைவரும் இந்த நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

விமான துறை காலிப்பணியிடங்கள்:

Air India நிறுவனத்தில் Female Cabin Crew பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Female Cabin Crew கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்களின் மொத்தம் மதிப்பெண் சதவீதம் 60% ஆகவும் இருக்க வேண்டும்.

Female Cabin Crew தகுதிகள்:

உயரம் – 155 செ.மீ

BMI அளவு – 18 முதல் 22 வரை

கண் பார்வை அளவு – 6/6

Air India வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிக்கும் நபர்கள் Freshers ஆக இருப்பின் குறைந்தபட்சம் 18 வயது முதல் 27 வயதிற்குள் உள்ளவராகவும், Cabin Crew நிறுவன பணியாளராக இருப்பின் அதிகபட்சம் 32 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

விமான துறை ஊதியம்:

தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

Air India தேர்வு முறை:

Air India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 23.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விமான துறை விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலையும் இணைத்து நேர்முக தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link

Post a Comment

0 Comments