தமிழக Post Office வேலைவாய்ப்பு 2022 – ரூ.19,900/- சம்பளத்துடன் நிரந்தர பணிவாய்ப்பு!

 தமிழக Post Office வேலைவாய்ப்பு 2022 – ரூ.19,900/- சம்பளத்துடன் நிரந்தர பணிவாய்ப்பு!

தமிழ்நாடு தபால் அலுவலகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள ஸ்டாஃப் கார் டிரைவர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுத்தப்படுகிறார்கள்.


தமிழ்நாடு Post Office காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி ஸ்டாஃப் கார் டிரைவர் பணிக்கென பாண்டிச்சேரி, விருத்தாசலம், தஞ்சாவூர், ஸ்ரீரங்கம், பட்டுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம், கடலூர், தாம்பரம், வேலூர், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, சென்னை ஆகிய பகுதிகளில் மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Post Office கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

தமிழ்நாடு Post Office வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TN Post Office ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 7வது CPC இன் படி சம்பள மேட்ரிக்ஸில் நிலை 2ன் படி, ரூ.19,900/- மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு Post Office தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TN Post Office விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.08.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NOTIFICATION

Post a Comment

0 Comments