தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் அரசு வேலை ரெடி – ஜூலை 5 விண்ணப்பிக்க இறுதி நாள்..!

 


தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் அரசு வேலை ரெடி – ஜூலை 5 விண்ணப்பிக்க இறுதி நாள்..!

கடலூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் (Cuddalore DMRHS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Cook, Washer Man பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்புடைய தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம் பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், கடலூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் (Cuddalore DMRHS) சமையலர் (Cook) பணிக்கு என 12 பணியிடங்களும், சலவையாளர் (Wash Man) பணிக்கு என 4 பணியிடங்களும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cook, Washer Man தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்கு எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Cook, Washer Man வயது விவரம்:

  • இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2022 அன்றைய நாளின் படி, குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • SC / SCA – 05 வருடம், MBC / BC – 02 வருடம் என வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

Cook, Washer Man சம்பள விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cuddalore DMRHS தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cuddalore DMRHS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (05.07.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

இணை இயக்குநர்,
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்,
கடலூர்.

NOTIFICATION



Post a Comment

0 Comments