10 ம் வகுப்பு படித்தவர்க்கு காத்திருக்கும் தமிழக அரசு வேலை – மாதம் சம்பளம் ரூ.50,000.!

 

10 ம் வகுப்பு படித்தவர்க்கு காத்திருக்கும் தமிழக அரசு வேலை – மாதம் சம்பளம் ரூ.50,000.!

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Record Clerk எனும் பதிவுறு எழுத்தர் பணிகளுக்கு கீழுள்ளவாறு காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.




TNRD Job பணியிடம்:

தற்போது வெளியான அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகில் Record Clerk பணிக்கு ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டும் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TNRD Job கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

TNRD Job வயது வரம்பு:

01.07.2022 ம் தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது பூர்த்தியடைந்த்திருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயதாக 32 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் அவசியம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

TNRD Job ஊதிய தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரையும் ஊதிய தொகை அளிக்கப்படும். மேலும் இத்துடன் வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

TNRD Job தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

TNRD Job விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதி நாளுக்குள் வரும்படி அனுப்பி விண்ணப்பித்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

TNRD Job Notification & Application

Post a Comment

0 Comments