தமிழக வங்கிகளில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்கள்..!

 

தமிழக வங்கிகளில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்கள்..!

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள பகுதி நேர துப்புரவு பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதை பயன்படுத்த விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

PNB பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பகுதி நேர துப்புரவு பணியாளர்கள் பணிக்கு மொத்தம் 41 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட வாரியாக,

  • மதுரை – 9 பணியிடங்கள்
  • கன்னியாகுமரி – 3 பணியிடங்கள்
  • புதுக்கோட்டை – 3 பணியிடங்கள்
  • ராமநாதபுரம் – 1 பணியிடங்கள்
  • சிவகங்கை – 3 பணியிடங்கள்
  • தென்காசி – 1 பணியிடங்கள்
  • தேனி – 1 பணியிடங்கள்
  • தூத்துக்குடி – 1 பணியிடங்கள்
  • திருநெல்வேலி- 6 பணியிடங்கள்
  • விருதுநகர் – 2 பணியிடங்கள்

PNB வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது 1.07.2021ன் படி குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 24 என்றும் இருக்க வேண்டும் என அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

PNB கல்வித்தகுதி:

இந்த பணிக்கு பத்தாம் வகுப்பில் தோல்வியானவர்களும், படிப்பறிவு இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

PNB மாவட்ட குடியிருப்பு:

மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PNB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 20.12.2021ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


Post a Comment

0 Comments