தமிழக கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021 – 89 காலிப்பணியிடங்கள்

 தமிழக கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021 – 89 காலிப்பணியிடங்கள்

சென்னை கார்ப்பரேஷன் நிர்வாகத்தின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய்‌ கட்டுப்பாட்டுத்‌ திட்டம்‌ மூலமாக காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன. அதில் மருத்துவ அலுவலர்‌, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர், மருந்தாளுனர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

சென்னை கார்ப்பரேஷன் நிர்வாகத்தில் மருத்துவ அலுவலர்‌, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர், மருந்தாளுனர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 89 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DEO வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாத பட்டதாரிகளாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

சென்னை கார்ப்பரேஷன் கல்வித்தகுதி :
  • 10வது தேர்ச்சி/ 12வது தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MBBS/ MBA/PG Diploma/ Bachelor’s Degree/ MSW/ M.Sc/ Degree/ Diploma/ Graduate/ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் சில ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
பெருநகர சென்னை கார்ப்பரேஷன் ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 10,000/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள்‌ தகுதி அடிப்படையில்‌ தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்‌ தேர்விற்கு அழைக்கப்படுவர்‌. நேர்முகத்‌ தேர்வு நடைபெறும்‌ தேதி மற்றும்‌ நேரம்‌ தபால்‌ மூலமாக தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 29.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • முகவரி – திட்ட அலுவலர்‌, திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய்‌ கட்டுப்பாட்டுத்‌ திட்டம்‌, 26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை – 600012

Download Chennai Corporation Notification PDF 2021


Post a Comment

0 Comments