தமிழக அஞ்சல் ஆயுள்‌ காப்பீடு முகவர்‌ வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

தமிழக அஞ்சல் ஆயுள்‌ காப்பீடு முகவர்‌ வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள அஞ்சலக ஆயுள்‌ காப்பீடு / கிராமிய அஞ்சலக ஆயுள்‌ காப்பீடு முகவர்‌ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:

அஞ்சலக ஆயுள்‌ காப்பீடு / கிராமிய அஞ்சலக ஆயுள்‌ காப்பீடு முகவர்‌ பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன

காப்பீடு முகவர்‌ வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

காப்பீடு முகவர்‌ கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள்‌ தங்களின்‌ கல்வித்தகுதி/வயதுத்தகுதி, இருப்பிடச்சான்று / ஆதார்‌ எண்‌, Pan Card இவற்றிற்கான அசல்‌ மற்றும்‌ நகல்‌ சான்றிதழ்களுடன்‌ 4 பாஸ்போர்ட்‌ அளவு புகைப்படத்துடன்‌ நேர்முகத்தேர்வில்‌ கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

  • மேற்குறிப்பிட்ட திட்டத்திற்கு முகவர்களை தேர்வு செய்யும்‌ பொருட்டு நேரடி முகவர்‌ தேர்வு ஸ்ரீரங்கம்‌ கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர்‌ அலுவலகத்தில்‌ (சாத்தார வீதி, ஸ்ரீரங்கம்‌) 10.11.2021 அன்று காலை 11 மணியளவில்‌ நடைபெற உள்ளது.
  • தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்‌ ஸ்ரீரங்கம்‌, முசிறி, துறையூர்‌ மற்றும்‌ பெரம்பலூர்‌ பகுதிக்குட்பட்ட இடங்களில்‌ முகவர்‌ பணியை மேற்கொள்ள வேண்டும்‌.
குறிப்பு:
  1. மற்ற ஆயுள்‌ காப்பீட்டு நிறுவனங்களின்‌ முகவர்களாக இருப்பவர்கள்‌ விண்ணப்பிக்க முடியாது.
  2. தேர்வு செய்யப்பட்டவர்கள்‌ பாதுகாப்பு வைப்பு கட்டணமாக ரூ.5000/- அவர்கள்‌ பெயரில்‌ தேசிய சேமிப்பு பத்திரமாகவோ அல்லது கிசான்‌ விகாஸ்‌ பத்திரமாகவோ எடுக்க வேண்டும்‌. மேலும்‌ உரிமம்‌ கட்டணமாக ரூ.50/- செலுத்த வேண்டும்‌.

Post a Comment

0 Comments