தமிழகத்தில் டிப்ளமோ சேர்க்கை அட்மிஷன் அறிவிப்பு 2021 ! TAMILNADU POLYTCHNIC ADMISSION

 தமிழகத்தில் டிப்ளமோ சேர்க்கை அட்மிஷன் அறிவிப்பு 2021

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலமாக பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் பகுதி நேர டிப்ளமோ பட்டயபடிப்பிற்கு என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Diploma சேர்க்கை :
  1. முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை
  2. பகுதி நேர டிப்ளமோ பட்டயபடிப்பு
டிப்ளமோ கல்வித்தகுதி :
  1. முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை – பத்தாம் வகுப்பு (SSLC/ Matriculation) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. பகுதி நேர டிப்ளமோ பட்டயபடிப்பு – 10 + ITI தேர்ச்சி அல்லது 10 + 2 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
பதிவு கட்டணம் :

மாணவர்கள் அனைவரும் பதிவு கட்டணமாக ரூ.150/- செலுத்த வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.06.2021 அன்று முதல் 12.07.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments