கோவை:கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள, சிறு மற்றும் குறு விவசாயிகளூக்கு உதவும் வகையில், அவர்களின் விவசாய நிலங்களை, டிராக்டர் மூலம் இலவசமாக உழவு செய்து கொடுக்க, 'டாபே' நிறுவனம் முன் வந்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டத்தில் உள்ள, சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் பெறும் வகையில், அவர்களின் விளைநிலங்களை வரும், 60 நாட்களுக்கு, இரண்டு ஏக்கர் வரை உள்ள நிலத்தை, டிராக்டர் மூலம் இலவசமாக உழுது கொடுக்க, 'டாபே கார்ப்பரேட்' நிறுவனம் முன் வந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பும், சிறு மற்றும் குறு விவசாயிகள், வேளாண் துறையின் உழவன் செயலியில் உள்ள வாடகை இயந்திரம் மையம் சேவையின் கீழ், 'வாடகை இல்லாத டிராக்டர் உழவு' என, பதிவு செய்யலாம்
0 Comments