how to get EC in tamil | tnreginet

 

ஆன்லைனில் இரண்டே நிமிடத்தில் வில்லங்கச் சான்றிதழ்(E.C.)-ஐ எளிதாக பெற…


EC (என்கம்ப்ரன்ஸ் சர்டிபிகேட்) எனப்படும் வில்லங்கச் சான்றிதழைகூட எளிதாக ஆன்லைனில் பெறலாம். ஆம் முன்புபோல் வில்ல‍ங்கச் சான்றிதழ்கேட்டு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நாட்கணக்கில் நடையாய் நடைக்க‍வேண்டிய அவசியமில்லை. ஆனாலும்  நம்மக்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வு குறைவுதான்… அமர்ந்த இடத்தில் இருந் தே  ஆன்லைனில் வில்லங்கச்சான்றிதழை பெற என்ன வழி?


சொத்துக்களை வாங்குபவர்கள், வாங்குவதற்குமுன்பு சொத்தின்கிரைய ப்பத்திரம், பட்டா, போன்றவற்றிற்கு அடுத்த‍ படி யாக வில்லங்க சான்றிதழ் அதாவது வாங்கவி ருக்கும் சொத்துக்கு உரிமையாளர் யார் என்ப தை நிரூபிக்கும் ஒரு சான்றிதழ் ஆகும்.  இந்த வில்லங்கச் சான்றிதழ் என்பது வாங்கவிருக்கும் சொத்தின் வரலாறு அதாவது யார் யார்  கைகளி ல் இருந்து எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிற து என்ற விவரமும், அந்த சொத்தின் உரிமை, யாருக்கெல்லாம்மாற்றப்பட்டிருக்கிறது என்பதையும், வாங்கவிருக்கும் சொத்து வங்கிகளிலோ நிதிநிறுவனங்களிலோ அடமானம் வைத்து அடமானப் பத்திரம் பதிவு செய்திருக்கிறார்களா என்ற விவரங்களையும், பிரிபடாத சொத்தாகவோ (அல்)  ஒருசொத்தை வாங்க விரும்புவர்கள், அந்தச் சொத்தில் ஏதா வது வில்லங்கம் இருக்கிறதா, சொத்தை விற்ப வர் பெயரில்தான் அந்தச்சொத்து உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளும் ஒருமுன்னெச்ச‍ரிக்கை ஆவணமாக வாங்குபவருக்கு பயன்படுகிறது. எனவே சொத்து வாங்குவதில் இந்த‌ வில்லங்கச் சான்றிதழ், முக்கியத்துவம் பெறுகிறது.

முன்பெல்லாம் இந்த வில்ல‍ங்க சான்றிதழ் பெறுவதற்குப் பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்று வில்லங்கச் சான்றிதழுக்காக விண்ணப்பித்து காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை முன்பு இருந்தது. ஆனால் இப்போது அதை எளிதில் ஆன்லைனிலேயே கணப் பொழுதில் பார்க்கவும் பெற வும் முடிகிறது.

ஆன்லைனில் வில்லங்கச் சான்றிழை மிகவும் எளிதாக பெறுவதற்கு கீழ்க்காணும் பதிவுத்துறை இணையதளத்திற்கு சென்று அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகச்சரியான பதிலை கொடுத்தா லேபோதும் வில்லங்க ச் சான்றிதழை மிக எளிதாக நீங்கள் பெறலாம்.

ஒருகுறிப்பிட்ட‍ ஆண்டுக்குமுன்புதான் இணை யத்தில் விவரம்கோரமுடியும். அதற்கு முந்தைய ஆண்டில் சொத்தின் தன் மையை பார்க்க‍ அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத்தைநாடி, பெற்றுக் கொள்ள‍லாம். 

Post a Comment

0 Comments