TN SKILL DEVELOPMENT |தமிழக அரசு சார்பில் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி!

தமிழக அரசு சார்பில் உதவித்தொகையுடன் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி!

  • 18 முதல் 40 வயது வரையில் உள்ளவர்கள் இலவச வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

  • தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, உதவித்தொகையுடன் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும், பயிற்சி முறை உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஜனவரி 5 ஆம் தேதியிட்ட வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, எலெக்ட்ரீசியன் உதவியாளர், ஃபிட்டர், வெல்டர் ஆகிய பணிக்கான திறன் எய்தும் பயிற்சி நடத்தப்படுகிறது.
  • இதற்கு 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மற்ற மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் இதில் கலந்து கொள்ள முடியாது.

  • இலவச பயிற்சி காலத்தில் போக்குவரத்துக்கான உதவித்தொகை, பயிற்சி புத்தகங்கள், எழுதுபொருட்கள், மேல் அங்கி வழங்கப்படும். தேர்வு பெறும் பயிற்சியாளர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தேர்வு பெறும் பயிற்சியாளர்களுக்கு பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர தேவையான வழிவகை செய்து தரப்படும்.

Post a Comment

0 Comments